பட்டதாரி ஆசிரியர் நேர்முகப் பரீட்சைக்கான F1 படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய பட்டம் வழங்கும் UCG  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள். 

ந. சந்திரகுமார் SLPS


இலங்கையில் மூன்று வகையான பாராளுமன்ற சட்டம், விசேட சட்டம் அடிப்படையில் பட்டம் வழங்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனங்கள். 


கீழே தரப்பட்டுள்ளன அரச பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெற்ற பட்டங்களின் Gradit ஐ உறுதிப்படுத்த பல்கலைக்கழக பதிவாளரிடம் F1 படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 


*விசேட பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு ஒரேயொரு பாடத்திற்கு மட்டுமே 30/40 Gradit க்கு மேல் இருப்பதால் --

 BA( Hons) Economic/ Tamil/Geography/ Political/ History/ Drama/ Dance/Music

BSc(Hons) Physics/ Chemistry/ Zoology/ Botany/ Pure Maths/ Applied Maths


*பொது பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு மூன்று பாடங்களுக்கும் தனித்தனியாக 30 Gradit கிடைக்கும். 


அதேவேளை ATI இல் நான்கு வருட உயர் தேசிய டிப்ளோமா பெற்றவர்கள் மேற்படி பரீட்சைக்கு தகுதி பெற முடியாது. ஏனெனில் ATI ஒரு பட்டம் வழங்கும் நிறுவனம் இல்லை என்பதோடு, உயர் தேசிய டிப்ளோமா NVQ 6 க்கு சமமானது. NVQ 7 தான் ஒரு பட்டத்திற்கு சமமானது. 


1)#விசேட #பாராளுமன்றச் #சட்டங்களின் (Special Acts of Parliament) கீழ் ஸ்தாபிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள்


*இவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டத்திற்கு மேலதிகமாக விசேட  பாராளுமன்றச் சட்டங்களின் மூலம் பட்டம் வழங்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன:


1) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (General Sir John Kotelawala Defence University - KDU)-

1981 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்கச் சட்டம் (மற்றும் அதன் திருத்தச் சட்டங்கள்).


2) தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (University of Vocational Technology UNIVOTEC)-2008 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்கச் சட்டம்.


3)இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம் (Ocean University of Sri Lanka)-2014 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்கச் சட்டம்.


 4)இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் (Buddhist and Pali University of Sri Lanka)-1981 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 1995 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்கத் திருத்தச் சட்டம்


5)இலங்கை பிக்கு பல்கலைக்கழகம் (Bhiksu University of Sri Lanka)-1996 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க பிக்கு பல்கலைக்கழகச் சட்டம்.


6)தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் (National Institute of Social Development - NISD)- 2001 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்கச் சட்டம்.

 

7)தேசிய வியாபார  முகாமைத்துவ நிறுவனம் (National Institute of Business Management - NIBM)

-1976 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்கச் சட்டம்.

  

2)#1978 #ஆம் #ஆண்டின் 16 #ஆம் #இலக்க #பல்கலைக்கழகங்கள் #சட்டத்தின் #கீழ் #ஸ்தாபிக்கப்பட்ட #அரச பல்கலைக்கழகங்கள்

இலங்கையின்  அரச பல்கலைக்கழகங்கள் அனைத்தும் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் (Universities Act No. 16 of 1978) கீழ் வெளியிடப்பட்ட விசேட கட்டளைகள் (Ordinances) மூலமாக உருவாக்கப்பட்டு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) நிர்வகிக்கப்படுகின்றன:


1.கொழும்புப் பல்கலைக்கழகம் (University of Colombo)


 2.பேராதனைப் பல்கலைக்கழகம் (University of Peradeniya)


 3.ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் (University of Sri Jayewardenepura)


4.களனிப் பல்கலைக்கழகம் (University of Kelaniya)


5.மொரட்டுவைப் பல்கலைக்கழகம் (University of Moratuwa)


6.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (University of Jaffna)


7.ருஹுணப் பல்கலைக்கழகம் (University of Ruhuna)


8.கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை (Eastern University, Sri Lanka)


9.தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (South Eastern University of Sri Lanka)


10.ரஜரட்ட பல்கலைக்கழகம் (Rajarata University of Sri Lanka)


11.வயம்ப பல்கலைக்கழகம் (Wayamba University of Sri Lanka)


12.சபரகமுவ பல்கலைக்கழகம் (Sabaragamuwa University of Sri Lanka)


13.ஊவா வெல்லச பல்கலைக்கழகம் (Uva Wellassa University)


14.வவுனியா பல்கலைக்கழகம் ( Vavuniya University


15.இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (Open University of Sri Lanka)


 16.கட்புலமற்றும் நிகழ்த்து கலைகள் பல்கலைக்கழகம் (University of the Visual and Performing Arts)


17.கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகம் (Gampaha Wickramarachchi University)


3)#பல்கலைக்கழகங்கள் #சட்டத்தின் #பிரிவு 25A #இன் #கீழ் #அங்கீகரிக்கப்பட்ட #பட்டம் வழங்கும் #நிறுவனங்கள்

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் பிரிவு 25A (Section 25A) இன் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், குறிப்பிட்ட பட்டங்களை வழங்குவதற்காக உயர்கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, அரை-அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்:


1.SLIIT (Sri Lanka Institute of Information Technology


2.NSBM (National School of Business Management)


3.CINEC Campus (Colombo International Nautical and Engineering College)


 4.Horizon Campus


 5.SLTC Research University (Sri Lanka Technological Campus)


6.Aquinas College of Higher Studies


7.KAATSU International University (KIU)


#ந. சந்திரகுமார் ஸ்லோப்ஸ்

ThankYou Sir👍