ETF BOARD SCHOLARSHIP
Application for Employees' Trust Fund Board (ETFB) Scholarships for Students Who have Passed the Grade 5 Scholarship Examination 2026
5 ශ්රේණිය ශිෂ්යත්ව විභාගය සමත් සිසුන් සඳහා සේවා නියුක්තයන්ගේ භාර අරමුදල් මණ්ඩල ශිෂ්යත්ව සඳහා අයදුම්පත් කැඳවීම 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பம் கோரல் 2026
* 9,000 Scholarships
* Financial Assistance of Rs.15,000.00
* Online Application
* Closing Date: 2026.10.31
*ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) ஆகியன பொதுவாக** தனியார் துறை (Private Sector) மற்றும் அரை-அரசு நிறுவனங்கள் (Semi-Government / State Corporations / Statutory Boards) ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பபட்டவை ஆகும்.
*ஆகவே இவற்றில் பணிபுரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கே இந்த புலமை பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.*
*அரசாங்கத்தின் சிவில் சேவைகளில் (சிவில் அமைச்சுக்கள், திணைக்களங்கள், பாடசாலைகள், அரச மருத்துவமனைகள் போன்ற அரசாங்க உத்தியோகங்களில்) நிரந்தரமாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதாந்தம் ETF/EPF நிதிகள் கழிக்கப்படுவதில்லை.* அவர்களுக்கு அரசாங்க ஓய்வூதியத் திட்டம் (Pension Scheme) அல்லது அக்ரஹார (Agrahara) காப்புறுதித் திட்டம் போன்ற பிற சலுகைகளே வழங்கப்படுகின்றன.
*ETF நிதியத்திற்குப் பங்களிப்பு செய்யாததால், அவர்களால் இந்தச் சலுகைக்கு விண்ணப்பிக்க முடியாது.*
*கவனிக்க*
*அரசாங்கத் துறையைச் சேர்ந்த பெற்றோராக இருந்தாலும்,*
பின்வரும் நிபந்தனைகளின் கீழ் வருபவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்:
*அரை-அரசு நிறுவன ஊழியர்கள்:* நீங்கள் ஒரு அரச கூட்டுத்தாபனம் (Corporation), அதிகாரசபை (Authority) அல்லது அரச வாரியத்தில் (Statutory Board) பணிபுரிந்து, உங்கள் சம்பளத்தில் இருந்து ETF நிதி கழிக்கப்பட்டு வந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
*ஒப்பந்த அல்லது தற்காலிக ஊழியர்கள்:* அரசாங்கத் திணைக்களம் ஒன்றில் தற்காலிக அல்லது ஒப்பந்த (Contract/Casual) அடிப்படையில் பணிபுரிந்து, உங்களுக்கு ETF பங்களிப்பு செலுத்தப்பட்டிருந்தால் விண்ணப்பிக்க முடியும்.
*மறுபெற்றோர் சலுகை: தாயோ அல்லது தந்தையோ ஒருவராவது தனியார் துறையிலோ அல்லது ETF பங்களிப்பு உள்ள நிறுவனத்திலோ பணிபுரிந்து, மற்றவர் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தால், அந்த ETF உறுப்பினரான பெற்றோரின் கணக்கின் கீழ் பிள்ளைக்கு விண்ணப்பிக்க முடியும்.*
அரசாங்கப் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் வைத்தியர்கள் அனைவரும் நிரந்தர அரசாங்க ஊழியர்கள் (Government Pensionable Employees) ஆவர்.
இவர்களது சம்பளத்தில் இருந்து ETF (3%) நிதி கழிக்கப்படுவதில்லை.
*எனவே, இவர்களது பிள்ளைகளுக்கு இந்த தரம் 5 புலமைப்பரிசில் நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.*
ஆனால், *ஆசிரியரோ அல்லது வைத்தியரோ ஒரு தனியார் பாடசாலையிலோ (Private/International School) அல்லது தனியார் மருத்துவமனையிலோ (Private Hospital) நிரந்தரப் பணியாளராக இருந்து, அவர்களுக்கு ETF கழிக்கப்பட்டால் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.*
சில தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு (Private Sector Companies) அவர்களது நிறுவனத்தின் ஊடாகவே விண்ணப்பங்கள் பிள்ளைகளுக்காக அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
*உங்களிடம் மாதாந்த சம்பளக் கூற்று (Pay Sheet) இருந்தால், அதில் ETF 3% எனக் குறிப்பிடப்பட்டு பணம் கழிக்கப்படுகிறதா என்று பாருங்கள். அது இருந்தால் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்!*
*நீங்கள் ஒரு NGO ஊழியராக இருந்து, உங்களுக்கு மாதாந்தம் ETF செலுத்தப்பட்டால், உங்கள் பிள்ளை மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி அடைந்திருந்தால் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.*
*கடைகளில் அல்லது வணிக நிறுவனங்களில்* பணிபுரியும் விற்பனையாளர்கள் (Sales Assistants), கணக்காளர்கள் (Cashiers/Accountants), துப்புரவுப் பணியாளர்கள் (Cleaners), பேக்கிங் செய்பவர்கள், அல்லது வாகன ஓட்டுநர்கள் என எந்தப் பதவியில் இருந்தாலும் *விண்ணப்பிக்கலாம்.*
*விண்ணப்பிக்கும் முன் பெற்றோரின் மாதாந்த சம்பள விபரப் பத்திரத்தில் (Pay Sheet) ETF (3%) பங்களிப்பு கழிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.*
*கடந்த 1 வருட காலமாக (12 மாதங்கள்) நீங்கள் வேலை செய்யும் கடையில்/நிறுவனத்தில் உங்களுக்கு முறையாக ETF செலுத்தப்பட்டிருக்க வேண்டும். நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 31.10.2026 இறுதித் திகதியாகும்.*

0 Comments